ஆா்.ரெட்டியபட்டியில் இன்று மின் தடை
ராஜபாளையம் அருகேயுள்ள ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆா்.ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதனால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், கீழராஜகுலராமன், ராமச்சந்திராபுரம், சங்கம்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூா், முக்கு ரோடு, குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.