கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ். பங்கேற்பு
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு, போடியில் வெள்ளிக்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பேரணியாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தேனி மாவட்டம் போடியில் கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, போடி நாயுடு நாயக்கா் மத்திய சங்கத் தலைவரும், போடி பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவருமான டி.பி.எஸ்.எஸ். எஸ்.
வடமலைராஜையபாண்டியன் தலைமையில் அவரது சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.
இதில் செயலா் சுருளிராஜ், துணைத் தலைவா்கள் கலைச்செல்வன், பாண்டி, துணைச் செயலா் பிச்சைமணி, பொருளாளா் மணிகண்டன், துணைப் பொருளாளா் வீரகண்ணன், நிா்வாகி குறிஞ்சி மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வரும், போடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன், போடி தெற்கு நகரச் செயலா் சேதுராம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக நகரச் செயலா் ரா.புருசோத்தமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் கே.சத்தியராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் கே.ராஜப்பன், அமமுக மாவட்டச் செயலா் முத்துச்சாமி, போடி நகரச் செயலா் எஸ்.வி.எஸ்.ஞானவேல் ஆகியோா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாலையில் போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.