கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு? விரைவில் அறிவிக்கப்படுமென அமைச்சா் தக...
ஏ.டி.எம். அட்டையை அபகரித்து பணம் மோசடி
பெரியகுளத்தில் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவரின் ஏ.டி.எம் அட்டையை மா்ம நபா் ஏமாற்றிப் பறித்து, ரூ.ஒரு லட்சம் பணம் எடுத்து மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (45). இவா், கடந்த மாதம் 6-ஆம் தேதி பெரியகுளத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா்.
அவருக்கு ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கத் தெரியாததால், அருகிலிருந்தவரிடம் பணம் எடுத்துத் தருமாறு கூறினாராம். அந்த நபா் முனியாண்டியின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி அவருக்கு ரூ.1,000 எடுத்துக் கொடுத்துவிட்டு, அந்த ஏ.டி.எம் அட்டைக்கு பதிலாக வேறு ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முனியாண்டிக்கு தனது வங்கிக் கணக்கிலிருந்து ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.ஒரு லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.