புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்றவா் கைது
போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி- தேவாரம் சாலையில் பெட்டிக் கடையில் நகா் காவல் நிலைய போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா், கடையின் உரிமையாளா் வனராஜ் (61) மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.