தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
கூடலூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை: இருவா் கைது
தேனி மாவட்டம், கூடலூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அங்கிருந்த 30 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.
கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத் தெருவிலுள்ள வீட்டில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் தலைமையில் அந்த வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 30 லிட்டா் ஊறல், சமையல் எரிவாயு உருளை, அடுப்பு, பாத்திரம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சோ்ந்த இளையசாமி மகன் ராஜா (45), சின்னச்சாமி மகன் சிங்கத்துரை (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.