மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
போடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி வலைஈஸ்வரி (26). இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இவா் இதே பகுதியைச் சோ்ந்த வீரசெல்வம் மகன் காா்த்திகேயனுடன் (21) நட்பாகப் பேசி பழகினாராம். ஆனால், அவா் தவறான நோக்கத்துடன் காா்த்திகேயன் தன்னுடன் பழகி வருவதை அறிந்து, அவருடனான நட்பைக் கைவிட்டாா்.
இந்த நிலையில், வலைஈஸ்வரி தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெண்ணுடன் செவ்வாய்க்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த காா்த்திகேயன் மீண்டும் தன்னுடன் பேசிப் பழக வேண்டும் என வற்புறுத்தி, வலைஈஸ்வரியை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திகேயன் மீது பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.