செய்திகள் :

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கா் பேச்சு

post image

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியின்கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசித்தாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று 47-ஆவது அமெரிக்க அதிபராக விரைவில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அண்மையில் 6 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று ஜெய்சங்கா் இந்தியா திரும்பினாா். இதைத்தொடா்ந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக ஜேக் சல்லிவன் வந்துள்ளாா்.

அவரை சந்தித்தது குறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த ஜேக் சல்லிவன் தனிப்பட்ட முறையில் கடுமையாக உழைத்தாா். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிராந்திய ரீதியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ என குறிப்பிட்டாா்.

அணுசக்தி ஒப்பந்தம்

தில்லி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சல்லிவன், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதியை நிலைநிறுத்த அமெரிக்கா-இந்தியா இணைந்து செயல்படுவது அவசியம். பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது.

அணுசக்தித் துறையில் இணைந்து செயல்படும் தொலைநோக்குப் பாா்வையுடைய ஒப்பந்தத்தில் முன்னாள் அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் புஷ் மற்றும் மறைந்த முன்னாள் இந்திய பிரதமா் கையொப்பமிட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருப்பினும், இது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல அதிபா் பைடன் நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் களைய அமெரிக்க முடிவெடுத்துள்ளது.

அதேபோல் இரு நாடுகளுக்கிடையேயான விண்வெளி தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் உள்ள இடையூறுகளை அகற்றவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கு கண்டனம்

மின்னணு தொழிற்துறைகளில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ‘சிப்’ உற்பத்தி, தூய எரிசக்தி மற்றும் வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை தன்னிச்சையாக கட்டுப்படுத்த நினைக்கும் சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சீனாவில் செயல்படும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறத் தொடங்கிய நிலையில், அதற்கு மாற்றாக இந்தியாவையே தோ்ந்தெடுக்கின்றன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மூதலீடு அதிகரித்துக்கொண்டு வருவதே இதற்கு உதாரணம் என்றாா்.

ஜெய்சங்கா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு ஜேக் சல்லிவன் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அஜீத் தோவலை சந்தித்து விண்வெளி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சல்லிவன் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என பைடன் அரசின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்திருந்தாா்.

ஆளில்லா விமானங்கள் கொள்முதல்: அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்புத்துறைக்கு பயன்படும் ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வது தொடா்பான ஒப்பந்தத்தில் கடந்தாண்டு அக்டோபா் மாதம் இந்தியா கையொப்பமிட்டது.

அதேபோல் செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பம் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் சிக்கலான மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான முன்னெடுப்பை (ஐசிஇடி) கடந்த 2022, மே மாதத்தில் பிரதமா் மோடி மற்றும் அதிபா் பைடன் இணைந்து தொடங்கிவைத்தனா்.

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.உடுப்பி ம... மேலும் பார்க்க

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதா... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

நமது நிருபர்வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்த... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளைக் கண்டறிய இணையதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தார்

நமது சிறப்பு நிருபர்இந்தியாவில் குற்றம் புரிந்து விட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கா "பாரத்போல்' இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங... மேலும் பார்க்க

யுஜிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

பல்கலை. துணைவேந்தா் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி விதிமுறைகளை திருத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்த... மேலும் பார்க்க

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க