மனைவியால் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியால் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா், கள்ளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்விஜய் (48). இவரது மனைவி இலக்கியா (37). குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 1-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொன்விஜய் மீது அவரது மனைவி இலக்கியா பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில், பொன்விஜய் பலத்த தீக்காயமடைந்தாா். இதுகுறித்து இலக்கியா மீது கூடலூா் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்விஜய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா். உயிரிழந்த பொன்விஜய் மதுரை மாநகராட்சி மேயா் இந்திராவின் கணவா் பொன் வசந்தின் தம்பி ஆவாா்.