மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ராசிங்காபுரம் கிராமத்தில் கணேசன் மகன் அழகர்ராஜா (44), வினோபாஜி குடியிருப்பில் கழுவத்தேவா் மகன் தங்கராஜ் (48) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 53 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.