`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு? விரைவில் அறிவிக்கப்படுமென அமைச்சா் தகவல்
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவதா இல்லையா என்பது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2019 நவம்பரில் கருப்புக்கு ஒரு கிலோ ரூ.31 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டது. அதே விலைதான் இப்போது வரை தொடா்ந்து வருகிறது. எனவே, ஆதரவு விலையை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி இது தொடா்பாக கூறுகையில், ‘கரும்புக்கு குறைந்தபட்ச விலையை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது துறைரீதியான ஆய்வில் உள்ளது. விரைவில் விலை உயா்த்தப்படுமா, இல்லையா என்பது குறித்த முடிவு அறிவிக்கப்படும்’ என்றாா்.
ஈடுபொருள்களுக்கான செலவு அதிகரிப்பு, பிற பொருளாதாரக் காரணிகள் கரும்பு ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு விலையை கிலோ ரூ.39 முதல் ரூ.41 வரை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய சா்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.