சென்னை - போடி ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு போடிக்கு புறப்படும் விரைவு ரயில்(20601) அதிகாலை 3.54 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!
அதேபோல், போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விரைவு ரயில்(20602) நள்ளிரவு 1.34 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(ஜன. 1) முதல் சோதனை முறையில் கூடுதலாக நாமக்கல்லில் நின்று செல்ல ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.