சீராப்பள்ளியில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை
ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பூமி பூஜை செய்து அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், பேரூராட்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.