செய்திகள் :

ராமநாதபுரம்: பெண் தொழிலாளிக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 4 பேர் கைது; நடந்தது என்ன?

post image

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த உடை மாற்றும் அறைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கடந்த 29 ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கட்டிடத் தொழிலாளியாகக் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி மாலை அச்சுந்தன்வயல் கிராமத்தை அடுத்துள்ள புத்தேந்தலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

கேமரா வைக்கப்பட்டிருந்த உடை மாற்றும் அறை

அப்போது அப்பெண்ணுக்கு இயற்கை உபாதை எழவே அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கியுள்ளார். அந்நேரத்தில் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த 4 பேர் அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் அப்பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸார், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை’ - உறவினர்கள் எழுப்பும் கேள்விகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர், தன்னுடைய மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியை விக்கிரவாண்டியி... மேலும் பார்க்க

`பல கோடி ரூபாய் முறைகேடு' - மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பல கோடி ரூபாய் மோசடிப்புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மத்திய சிறையில், கடந்த 201... மேலும் பார்க்க

திருவாரூர்: ரயிலில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம் - போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, மாற்றுத்திறனாளி. இவர் சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

Karnataka: பைக் வாங்கப் பணம் கேட்டு டார்ச்சர்; கணவனைக் கொன்று உடலை மறைத்த மனைவி; நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெலகாவியில், தன்னைத் துன்புறுத்திய கணவரைக் கொன்று, உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி கிணற்றில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.போலீஸாரின் கூற்றுப்படி, டிசம்பர் 10 ஆ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண்மீது பெட்ரோல் ஊற்றிய உணவு டெலிவரி பாய் - நண்பனுடன் கைது!

சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயதாகும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் குடியிருக்கும் அர்ஜூன் என்பவருக்கும் இடையே பழக்கம் ... மேலும் பார்க்க

சென்னை: `5 துப்பாக்கிகள்; 79 தோட்டாக்கள்' - போதைப் பொருள் கும்பலின் பகீர் பின்னணி

சென்னை அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் கடந்த 31.12.2024-ல் அரும்பாக்கம் ரசாக் கார்ட... மேலும் பார்க்க