செய்திகள் :

கடல் நண்டுச்சாறு முதல் அமிர்தப்பொடி வரை...சளி, இருமல் போக்கும் ரெசிபிக்கள்!

post image

கடல் நண்டுச்சாறு

நண்டுச்சாறு

தேவையானவை:

நண்டு - 10, நண்டின் சதைப்பகுதி (தனியாக) - 100 கிராம், பெரிய வெங்காயம் - 250 கிராம், பிரிஞ்சி இலை - 5 கிராம், மிளகு - 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், கிராம்பு - 5 கிராம், கொத்தமல்லித்தழைத்தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்), தனியாத்தூள் - 15 கிராம், மிளகாய்த்தூள் - 20 கிராம், கறிவேப்பிலை - 25 கிராம், பூண்டு - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சீரகத்தூள் - 15 கிராம், சோம்பு - 10 கிராம், தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - சிறிது, மஞ்சள்தூள் - 10 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, மிளகு, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, பூண்டு, பிரிஞ்சி இலை பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நண்டை நன்றாகக் கழுவி சதைப்பகுதியுடன் நன்கு இடித்து வைக்கவும். இதைத் தாளித்தவற்றோடு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தக்காளி, கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து மைய வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் இட்டு சூடானதும், நண்டின் சதைப்பகுதியைச் சேர்த்து பச்சை வாசனைப் போக வேகும் அளவுக்கு லேசாக வதக்கவும். நண்டு சாறை பரிமாறும் போது மேலே வெந்த நண்டு சதையைப் போட்டு, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

பூண்டு - மிளகுக் குழம்பு

பூண்டு - மிளகுக் குழம்பு

தேவையானவை:

உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

அமிர்தப் பொடி

அமிர்தப் பொடி

(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)

தேவையானவை:

தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.

செய்முறை:

கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை:

விழுதாக அரைக்க: துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.

குழம்புக்கு:

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.

இஞ்சிப் பூண்டு தொக்கு

இஞ்சிப் பூண்டு தொக்கு

தேவையானவை:

தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

தூதுவளைக் குழம்பு

சளி இருமலை போக்கும் தூதுவளை!

தேவையானவை:

முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி, மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும். தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்... மேலும் பார்க்க

``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொ... மேலும் பார்க்க

``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் மூர்த்திஅ... மேலும் பார்க்க

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை! * மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம். * திருந... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? - Fact Check

'என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?' என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, 'கொள்முதல் விலை அதிகமாக உள்ளது' என்று பொங்கல் தொகுப்ப... மேலும் பார்க்க

Khushbu: ``பாலியல் குற்ற விவகாரத்தில் கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்காதீங்க.." -நடிகை குஷ்பு ஆவேசம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக பா.ஜ.க மகளிர் அணி அறிவித்திருக்கிறது. இது தொடர்ப... மேலும் பார்க்க