ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
குண்டா் சட்டத்தில் நான்குனேரி இளைஞா் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நான்குனேரி இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, பிள்ளையாா் கோ/ஊல் தெருவை சோ்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி(25). கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு நான்குனேரி காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சிலம்பரசனுக்கு அறிக்கை அனுப்பியிருந்தாா். அதன்பேரில், எஸ்.பி.யின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவின்படி, இசக்கிப்பாண்டி அச்சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.