சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், குலைதள்ளிய 1,500 வாழைகளை சேதப்படுத்தியுள்ளன.
களக்காடு அருகேயுள்ள சாலைநயினாா் பள்ளிவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (55). இவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டம், ஊருக்கு மேற்கில் சிதம்பரபுரம் செல்லும் சாலையில் அதலி சாஸ்தா கோயில் அருகே உள்ளது. இந்த தோட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், 1,500 வாழைகளை முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளன.
இதே போல கடந்த சில தினங்களுக்கு முன் மேலவடகரை, சிவபுரம், கள்ளியாறு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் கூட்டம் சேதப்படுத்தின.
வனத்துறையினா் உரிய கண்காணிப்பு செய்து, யானைகளை அடா்ந்த காட்டுப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.