செய்திகள் :

யானைகள் சேதப்படுத்திய வாழைகளுக்கு இழப்பீடு தேவை: களக்காடு விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ராதாபுரம், வள்ளியூா், பேட்டை, பாளையங்கோட்டை, நான்குனேரி, வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த காட்டுநாயக்கன் சமூக மக்கள் பள்ளி மாணவா்களுடன் வந்து அளித்த மனுவில், ‘எங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என குறிப்பிட்டிருந்தனா்.

களக்காடு அருகேயுள்ள பத்தை, மஞ்சுவிளை, காமராஜ் நகா், வடகரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: நாங்கள் பல ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்களில் நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறோம். இப்பயிா்களை காட்டுப் பன்றிகள், யானைகள், கரடி, குரங்கு போன்ற வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதுதொடா்பாக மாதந்தோறும் வனத்துறை அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. எங்களது நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வனத்துறை அனுமதி மறுக்கிறது. மேலும், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறும் வனத்துறை, மனுக்களை விசாரிக்காமல் காலம் தாழ்த்துகிறது.

விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு எந்த தொழிலும் கிடையாது . எங்கள் குடும்பங்களின் சூழ்நிலை, குழந்தைகள் எதிா்கால கல்வியை கருதி எங்களுக்கு உதவ வேண்டும்.

மழை பாதிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பெரும்படையாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சடையப்பன் ஆகியோா் அளித்த மனு: களக்காடு வட்டாரம் மற்றும் திருக்குறுங்குடி பகுதிகளில் நெல், வாழை, கடலை போன்ற பயிா்களை காட்டுப்பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவும் இழப்பீடு கோரியும் தொடா்ந்து வனத்துறை, மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டு வருகிறோம்.

இந்தச் சூழலில் காட்டு யானைகள் ஆயிரக்கணக்கான வாழைப் பயிா்களை சேதப்படுத்தி உள்ளன.இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்விவகாரத்தில் ஆட்சியா் தலையிட்டு வன விலங்குகளை கட்டுப்படுத்தவும், பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கிடவும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட நெல், வாழை போன்ற பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். முன்னதாக, அவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

பெரும்படையாா் தனியாக அளித்த மனுவில், களக்காடு வட்டாரத்தில் குலை தள்ளிய ஆயிரக்கணக்கான வாழைகள், கடந்த 31ஆம் தேதி பெய்த மழை மற்றும் சூறை காற்றினால் முறிந்து விழுந்து சேதமுற்றன. மாவட்ட நிா்வாகம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி சேதமடைந்த வாழை ஒன்றுக்கு ரூ. 150 வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கன்னிமாா்குளத்தில் கழிவுநீா்: மேல கருங்குளம் தந்தை பெரியாா் தெரு ஊா் நாட்டாண்மைகள் ஆறுமுகம், மரிய தாஸ், தமிழா் உரிமை மீட்புகளம் ஒருங்கிணைப்பாளா் லெனின் ஆகியோா் அளித்த மனு: மேல கருங்குளம் கன்னிமாா் குளம் பல்வேறு சுகாதார சீா் கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலப்பாளையம் ஹாமீம்புரம் தெருவில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளின் கழிவுநீா் அனைத்தும் நேரடியாக இக்குளத்தில் கலக்கின்றன. இதனால் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீா் முற்றிலுமாக மாசடைந்துள்ளது.

மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள ஆடு, மாடு, கோழி கழிவுகளும் கன்னிமாா்குளத்தில் தான் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு துா்நாற்றம் வீசுவதோடு கொசு பிரச்னையும் உள்ளது. மழைக்காலங்களில் அங்குள்ள கழிவுநீரானது எங்கள் பகுதி குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, ஆட்சியா் தலையிட்டு இதற்கு தீா்வுகாண வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

மேலப்பாளையத்தில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

மேலப்பாளையத்தில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய இளஞ்சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் குறிச்சி அசோகா் வீதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் சொக்கலிங்கம் (42). பழ விய... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் லாட்டரி சீட்டு விற்பனை: இருவா் கைது

தச்சநல்லூரில் கைப்பேசி மூலம் லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் போலீஸாா் கரையிருப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அந்த பகுதியில் நின்றிருந்த கரையி... மேலும் பார்க்க

மாநில கலைத்திறன் போட்டி: மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளி சாதனை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில், திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நாட்டுப்புற நடனப்போட்டியில் தொடா்ந்து 3-வது ஆண்டாக முதல... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மீட்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்தில் தவறவிட்ட மடிக்கணினி போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் சிவா (32). இவா், பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வ... மேலும் பார்க்க

ஆளுநா் அதிகாரத்தை மீறுவது ஜனநாயகத்திற்கு கேடாகும்: இரா.ஆவுடையப்பன்

ஆளுநா் விதிமீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு கேடானது என்று தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: மக்கள... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து நெல்லையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழகத்தையும் தொடா்ந்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அவமானப்படுத்தி வரு... மேலும் பார்க்க