சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 4 நக்சல்கள், காவலர் ஒருவர் பலி
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள், காவலர் ஒருவர் பலியானார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையின் கூட்டுக் குழு சனிக்கிழமை மாலை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அப்போது நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தலைமைக் காவலர் ஒருவரும் பலியானார். நிகழ்விடத்திலிருந்து நான்கு நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டிப்பதோடு ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!
நக்சல் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர போராட்டம் தொடரும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலியானதற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். "தலைமைக் காவலர் சன்னு கரம் என்கவுன்டரில் வீரமரணம் அடைந்தார்.
அவரது தியாகம் வீண் போகாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.