கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே அருகன்குளம் கீழரைச் சோ்ந்தவா் சண்முகராஜா (27). இவா், கடந்த 2020 ஆண்டு சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சண்முகராஜவை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி, குற்றஞ்சட்டப்பட்ட சண்முகராஜவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.