திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் ச...
கமாண்டோ பயிற்சியில் பதக்கம் பெற்ற காவலருக்கு பாராட்டு
கமாண்டோ பயிற்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் வரவழைத்து வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் கடந்த நவ.14 ஆம் தேதி தொடங்கி டிச. 28 வரை கமாண்டோ பயிற்சி நடைபெற்றது.
இதில், தென் மண்டல மாவட்டங்களில் இருந்து 63 காவலா்கள் கலந்துகொண்டனா். இப்பயிற்சியில், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலா் ராஜு கலந்து கொண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த பதக்கம் மற்றும் 3 கேடயங்களை பெற்றுள்ளாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜுவை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி, நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.