செய்திகள் :

”எனக்கும் கூட்டணி மந்திரி சபை வேண்டும் என்ற விருப்பம் உள்ளது” - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

post image

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,

“அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து,

சமுதாய விழிப்புணர்வு வேண்டும். பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் நடந்த சம்பவங்களுங்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். போராடுவதற்கும், துண்டு பிரசுரங்கள் அளிப்பதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் . மாறாக, அனுமதி மறுக்கக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் தான் எஸ்.ஐ.டி விசாரணை மேற்கொண்டுள்ளது. விரைவாக விசாரணை செய்து அறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும். அதற்கு முன்னதாக நாம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையின் வெளியீடு என்பது கண்டனத்துக்குரியது. அது யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு பல்கலைக்கழக அதிகாரிகளை பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்தில் வேறு ஒரு நபர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தும் எஸ்.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினாலே மாற்றம் வந்துவிடும் என்று நினைக்க முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்.

எந்தக் கட்சி நின்றால் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை இந்தியா கூட்டணி கலந்து பேசி ஆலோசனை செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி அங்கு வெற்றி பெறச் செய்வோம். எனக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

கார்த்த் சிதம்பரம்

எல்லா கட்சிகளின் விருப்பம் கூட அதுதான். இன்னும் தேர்தலுக்கு 16 மாதங்கள் இருக்கிறது. இப்போது அது குறித்து எதுவும் பேசத் தேவையில்லை. அந்த காலகட்டத்தில் அது குறித்து பேசலாம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரலாம். இதே கூட்டணி நீடிக்கும்.

அ.தி.மு.க-விற்கு முதலில் சொந்த பலம் வரட்டும். பின்னர், அவர்கள் பலத்தை கூட்டலாம்.

விஜய் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. மாநாட்டில் ஆளுநருக்கு எதிராக பேசிவிட்டு, இப்போது ஆளுநரைச் சந்தித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என பல்வேறு விசயங்களில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று முதலில் தெரியட்டும். பா.ம.க கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குடும்பக்கட்சியால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை. அது சுமூகமாக தீர்ந்து விடும்.

அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் ரியாலிட்டி ஷோவாக தான் நாம் பார்க்க வேண்டும் யாராவது ஒரு ஜோசியர் காலில் காலணி அணியாமல் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வாருங்கள் என்று கூறி இருக்கலாம்“ என்று தெரிவித்தார்.

புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்தி... மேலும் பார்க்க

`கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமையைச் சிதைக்கும்..!' - முரசொலி காட்டம்; திமுக கூட்டணியில் சலசலப்பா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இம்மாநாட்டில் பேசிய சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம... மேலும் பார்க்க

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ஆர்.பி.உதயகுமார்

"வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார் அ.த... மேலும் பார்க்க