ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
Bumrah : 'நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்!' - ரோஹித்தின் விலகல் குறித்து பும்ரா!
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் தொடங்கியிருக்கிறது. எதிர்பார்த்ததை போலவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக கில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பும்ரா கேப்டன் ஆகியிருக்கிறார். இந்நிலையில், ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து டாஸின் போது பும்ரா பேசியிருக்கிறார். அதில் இந்திய அணி ஒற்றுமையாக இருப்பதாக அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.
பும்ரா பேசுகையில், 'நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்புகிறோம். இந்தத் தொடரில் நாங்கள் சில சிறப்பான செயல்பாடுகளை கொடுத்திருக்கிறோம். கடந்த போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது. தோல்விகளிலிருந்து மீண்டு வரும் வித்தையை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களின் கேப்டன் ரோஹித் அவருடைய தலைமைத்துவத்தின் பக்குவத்தை காட்டியிருக்கிறார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகி இருக்கும் முடிவை எடுத்திருக்கிறார். ரோஹித்தின் அந்த முடிவு ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இந்த அணியில் யாரும் சுயநலமாக யோசிப்பதில்லை. அணியின் நலனுக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறோம்.' என்றார்.
இப்போது பேட் செய்து கொண்டிருக்கும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. கோலி களத்தில் நிற்கிறார்.
உணவு இடைவேளைக்கு முன்பான கடைசி பந்தில் கில் 20 ரன்களில் லயனின் பந்தில் அவுட் ஆனார். தொடர் 2-1 என ஆஸ்திரேலியாவின் கையில் இருக்கிறது. தொடரை சமன் செய்ய இந்திய அணி இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும்.