Khel Ratna: குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு
விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கான பெயர்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்தவகையில் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற மனுப்பாக்கர், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 17 ம் தேதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், இந்த நான்கு பேருக்கும் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க இருக்கிறார். கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனுப்பாக்கர், குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங்,பிரவீன் குமார் ஆகியாருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!