செய்திகள் :

Aus v Ind : 'சீனியர்களின் சொதப்பல்; பன்ட்டின் விக்கெட்'- இந்திய அணியின் தோல்விக்கான அந்த 3 காரணங்கள்

post image
பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி வீழ்ந்திருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணிக்கு 340 ரன்கள் இந்திய அணிக்கு டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. 92 ஓவர்கள் மிஞ்சியிருந்தது. நின்று ஆடி போட்டியை டிரா செய்திருக்க வேண்டும் அல்லது அட்டாக்கிங்காக ஆடி டார்கெட்டை நோக்கி முன்னேறியிருக்க வேண்டும். அந்த இரண்டையுமே இந்திய அணி செய்யவில்லை. 10 விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான அந்த 3 காரணங்கள் இங்கே.

சீனியர்களின் சொதப்பல்

இந்திய அணியின் முன் இன்றைக்கு இருந்தது இமாலயச் சவால். இதை சமாளிக்க இந்திய அணியின் சீனியர்களான கோலியும் ரோஹித்தும் தங்களின் முதுகில் பொறுப்பை சுமந்திருக்க வேண்டும். ஆனால், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி சென்றனர். முதல் இன்னிங்ஸிலுமே இவர்கள் இருவரும் ரன்னே அடிக்காமல் கையை விரித்ததுதான் பிரச்னையாகிப் போனது. இருவருமே நீண்ட அனுபவம் மிக்க பக்குவமான வீரர்கள். ஆனால், இங்கே இருவரும் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். இருவரும் டிபன்ஸில் திணறுகின்றனர். இருவருக்குமே டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிற மனநிலையே இல்லாமல் போய் விட்டதோ என்றும் தோன்றுகிறது. ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே பேட்டை விட்டு கோலி அவுட் ஆகிவிடுகிறார். அரைகுறையாக கவனமே இல்லாமல் எதோ ஷாட்டை ஆடி ரோஹித் அவுட் ஆகிவிடுகிறார்.

Virat Kohli

இருவரும் மீண்டும் மீண்டும் இதே விதத்தில் அவுட் ஆகிறார்கள் என்பதுதான் பிரச்னை. சாகச மனப்பான்மையோடு ஆடும் பண்ட்டால் தன் கையைக் கட்டிக் கொண்டு ஒரு செஷன் முழுக்க விக்கெட் விடாமல் ஆட முடியும் போது கோலியாலும் ரோஹித்தாலும் அப்படி ஆட முடியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இருவருமே தங்களின் கரியர் சார்ந்து முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றனர்.

பன்ட்டின் `அந்த’ விக்கெட்

இந்திய அணி முதல் செஷனிலேயே 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஜெய்ஸ்வாலும் ரிஷப் பன்ட்டும்தான் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றனர். இரண்டாவது செஷனில் இருவருமே நன்றாக ஆடினர். கடந்த இன்னிங்ஸில் 'Stupid' பட்டம் வாங்கிய பன்ட் இந்த முறை நிலைமையை உணர்ந்து சிறப்பாக ஆடினார். உணவு இடைவேளைக்குப் பிறகான அந்த செஷனில் பன்ட் பேட்டை வீச விரும்பவே இல்லை. நின்று தற்காப்பு ஆட்டம் ஆடினார். தோள்ப்பட்டையில் அடியெல்லாம் வாங்கிய போதும் விழுந்து புரண்டு ஆடும் ஷாட்டை அவர் ஆடவே இல்லை. இன்னொரு பக்கம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் வேகமாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். தேநீர் இடைவேளை வரை எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.

Pant

முக்கியமான பௌலர்களெல்லாம் வீசும்போது பண்ட் தற்காப்பாக ஆடுவதால், அவர் அந்த கூட்டுக்குள் இருந்து விடுவித்து பெரிய ஷாட்களை ஆட வைக்க லபுஷேன், டிராவிஸ் ஹெட் போன்றோரை கம்மின்ஸ் வீச வைத்தார். அது ஒரு பொறி. ஆனால், பண்ட் அதை சரியாக உணராமல் பெரிய ஷாட்டுக்கான தூண்டுதல் ஏற்பட்டு ஹெட்டின் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார். பன்ட்டின் விக்கெட்தான் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பு முனை. அங்கிருந்துதான் அடுத்தடுத்து வரிசையாக ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வீழ்த்தியது. பண்ட் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் அல்லது நாம் ட்ராவை நோக்கி போகப்போகிறோம் என்கிற செய்தி சரியாக சொல்லப்பட்டிருந்தால், அந்த விக்கெட்டை தவிர்த்திருக்க முடியும்.

கூடுதலாக கொடுக்கப்பட்ட அந்த 60 ரன்கள்

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களை எடுத்திருந்தது. அதில் கடைசி விக்கெட்டுக்கு லயனும் போலண்ட்டும் இணைந்து மட்டும் 61 ரன்களை சேர்த்திருந்தனர். கிட்டத்தட்ட 20 ஓவர்களுக்கு பேட்டிங் ஆடியிருந்தனர். முக்கியமான விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய பௌலர்களால் டெய்ல் எண்டர்களை வீழ்த்த முடியவில்லை. இவர்களை வேகமாக வீழ்த்தி 300 ரன்களுக்கு கீழே டார்கெட்டை வைத்திருந்தால், இந்தப் போட்டியில் கதையாடலே மொத்தமாக மாறியிருக்கும். இந்திய அணியை விட ஆஸ்திரேலியாவுக்குதான் அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.

bumrah

எல்லா விக்கெட்டுகளையுமே பும்ராவே எடுத்துக் கொடுக்க முடியாது. அவருக்கு உதவும் வகையில் மற்ற பௌலர்களும் செயல்பட வேண்டும். இது பல சமயங்களில் நிகழாமல் போய் விடுகிறது. பௌலிங் யூனிட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியுமே பும்ராவை மட்டுமே நம்பியிருப்பதன் விளைவு இது.

இந்திய அணியின் தோல்வி பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.!

Indian Team: 'கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!' இருவரின் எதிர்காலம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் சோபிக்கவே இல்லை. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே விராட் கோலியும் ர... மேலும் பார்க்க

Andhra: "ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல்; ஆமைகளின் துணை" - 52 வயதில் கடலில் 150 கி.மி நீந்திய பெண்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த 52 வயது பெண்மணி விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரை 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.கோலி ஷியாமளா என்ற நீச்சல் வீராங்கனை டிசம... மேலும் பார்க்க

Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்

சிட்னி டெஸ்ட்டை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அத்தோடு இந்தத் தொடரையும் 2-1 என வென்று கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ... மேலும் பார்க்க

அர்ஜுனா விருது: 'சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!' - நெகிழும் துளசிமதி முருகேசன்

கடந்த செப்டம்பர் மாதம் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்.இதனைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

Bumrah : 'நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்!' - ரோஹித்தின் விலகல் குறித்து பும்ரா!

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் தொடங்கியிருக்கிறது. எதிர்பார்த்ததை போலவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக கில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பும்ரா... மேலும் பார்க்க

Khel Ratna: குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு.அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கான பெயர்களை மத்தி... மேலும் பார்க்க