செய்திகள் :

Rishabh Pant : 'Stupid...Stupid...Stupid' - பன்ட்-ஐ கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்!

post image
பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் தாறுமாறாக ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகியிருந்தார். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த முன்னாள் வீரர் கவாஸ்கர் பண்ட்டை 'Stupid...Stupid...Stupid..' என கடுமையாக விமர்சித்தார்.
Pant

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். நேற்றைய நாளின் முடிவில் 164-5 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஜடேஜாவும் பண்ட்டும் க்ரீஸில் நின்றனர். இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே போராட வேண்டிய நிலை இருந்தது. ஜடேஜாவும் பன்ட்டும் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருந்தனர். ஆனால், ரிஷப் பன்ட் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கன்னாபின்னாவென ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகினார். விழுந்து புரண்டு பைன் ஸ்கூப் ஆடி பைன் லெக்கில் பவுண்டரி அடிப்பது பண்ட்டின் வழக்கம். போலண்ட் வீசிய ஓவரில் முதலில் அப்படி ஒரு ஷாட்டுக்கு பண்ட் முயற்சி செய்திருந்தார். ஆனால், அது க்ளிக் ஆகவில்லை. மீண்டும் அதே ஓவரில் அப்படி ஒரு ஷாட்டை ஆடினார். ஆனால், பைன் லெக்கை குறிவைத்து அவர் ஷாட் ஆட பந்து தேர்டு மேனுக்கு பறந்தது. தேர்டு மேனில் டீப்பில் நின்ற லயன் கேட்ச் பிடிக்க 28 ரன்களில் அவுட் ஆனார்

அந்த சமயத்தில் கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர், 'Stupid...Stupid...Stupid...' என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு, 'இது ஒரு Stupid ஆன ஷாட். அணியின் நிலைமையை புரியாமல் ஆடியிருக்கிறார். இந்திய அணி இப்போது இருக்கும் சூழலில் இப்படி ஒரு ஷாட்டை ஆடியா விக்கெட்டை பறிகொடுப்பது. நீங்கள் உங்களின் விக்கெட்டை அவர்களின் கையில் தூக்கி கொடுத்திருக்கிறீர்கள். இதுதான் என்னுடைய இயல்பான ஆட்டம் என தயவு செய்து சொல்லாதீர்கள். இது உங்களின் இயல்பான ஆட்டம் அல்ல.' என கடுமையாக விமர்சித்திருந்தார்.

Pant

ரிஷப் பண்டை பற்றிய கவாஸ்கரின் விமர்சனம் குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Nithish Reddy : 'தந்தையின் வாழ்நாள் கனவு; அணியின் தேவை' - எமோஷனல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி

சீனியர்களால் செய்ய முடியாததை...சீனியர்களால் செய்ய முடியாததை அறிமுகத் தொடரிலேயே 21 வயதே ஆகியிருக்கும் நிதிஷ் ரெட்டி செய்து காண்பித்திருக்கிறார். வலுவான ஆஸ்திரேலிய அட்டாக்குக்கு எதிராக நேர்த்தியான ஆட்டத... மேலும் பார்க்க

Aus v Ind : 'திணறும் இந்தியா; மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்க போராட்டம்'

மெல்பர்ன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் நடந்து வருகிறது. கடந்த டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்ட்டிலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கடுமையாக சொதப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தொடர் 1-1 என சமநிலையில் இருக்கையில் மெல்பர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 'The Western Australian' எனும் ... மேலும் பார்க்க

Aus v Ind : அபராதமா...போட்டியில் ஆட தடையா? விஸ்வரூபம் எடுக்கும் கோலி விவகாரம்!

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் 19 வயது இளம் வீரரான கான்ஸ்டஸூடன் இந்திய அணியின் அனுபவ வீரரான கோலி ஸ்லெட்ஜ்ஜி... மேலும் பார்க்க

Konstas: 'அந்த பையனுக்கு பயம் இல்ல' - 1,445 நாள்களுக்கு பிறகு டெஸ்டில் பும்ரா பந்தில் சிக்ஸ்

பாக்சிங் டே டெஸ்ட் மேட்ச் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மிக அதிகம் கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ். ஆரம்பத்தில் அணியில் ஆஸ்திரேலியா வீ... மேலும் பார்க்க

Sam Konstas : 'பும்ராவையே பதற வைத்த கான்ஸ்டஸ்' - முதல் செஷனில் என்ன நடந்தது?

மிரட்டும் வித்தைகளை கத்து வைத்திருக்கும் ஒரு பயமறியா இளஞ்சிங்கத்தை அரங்கம் நிறைந்த சர்க்கஸ் கூடாரத்துக்குள் இறக்கி விட்டதைப் போன்று இருந்தது கான்ஸ்டஸின் ஆட்டம். அத்தனை சுவாரஸ்யம்... அத்தனை விறுவிறுப்ப... மேலும் பார்க்க