செய்திகள் :

‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டம்: தூத்துக்குடியில் நாளை தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

post image

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 30-இல் தொடங்கி வைக்கவுள்ளாா்.

மேலும், தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை முதல்வா் ஞாயிற்றுக்கிழமை (டிச.29) தொடங்கிவைக்கவுள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மகளிா் முன்னேற்றத்துக்குப் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா்.

அந்த வகையில் புதுமைப் பெண் திட்டம் 2022 செப். 5-இல் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுவரை 4.25 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவியா்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் டிச. 30 காலை 10 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைக்கிறாா். இதன் பயனாக, தமிழகம் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயா்கல்வியில் சோ்ந்துள்ள 75,028 மாணவியா் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயனடைவா்.

மினி டைடல் பூங்கா: தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கவுள்ளாா்.

ரூ.32.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தூத்துக்குடி: மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 29) திறந்துவைத்தார். மீளவிட்டானில் 63000 சதுர அடி பரப்பளவில் ரூ. 32.50 கொடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் ம... மேலும் பார்க்க

விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம்: முதல்வர்

விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காலத்தால் அ... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை- சிறப்பு குழுவின் விசாரணை தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங... மேலும் பார்க்க

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது: சீமான்

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், த... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணை

அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணைஅண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் நாளை விசாரணை மேற்கொள்கிறது. இவ்வழக்கை விசாரிக்க இன்று இரவு சென்னை வரும் மகளிர் ஆணைய அதிகாரிகள் ... மேலும் பார்க்க