செய்திகள் :

தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு!

post image

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஏர் கனடா நிறுவனத்தின் விமானம் (எண் 2259) கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் தீவின் செயின்ட் ஜான் நகரில் இருந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்திற்குநேற்று சென்றது.

கனடா நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் தரையிறங்கும் நேரத்தில் சக்கரம் ஒன்று பழுதானதால் 20 டிகிரி இடதுபுறம் சாய்ந்த கோணத்தில் விமானத்தின் இறக்கை தரையில் உரசியபடி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து காரணமாக அதிக சத்தம் எழும்பியதால் பயணிகள் உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் வரை விமானம் தரையில் இறக்கையை உரசியபடியே சென்றதால் தீப்பிடித்து விமானம் பாதிப்புக்குள்ளாகுமோ என பயணிகள் அச்சமடைந்தனர்.

ஆனால், விமானம் நின்றவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்த சில பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

விமானத்தில் எத்தனைப் பயணிகள் இருந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பின் விமான ஓடுதளம் மீண்டும் திறக்கப்பட்டது.

மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் அவரின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தில்லியில் மன்மோகன் ... மேலும் பார்க்க

உலகப் போர் தாக்குதலில் உயிர் தப்பிய மருத்துவர்: 103 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் முத்து துறைமுகம் மீது 1941 ஆம் ஆண்டு ஜப்பான் நடத்திய தாக்குதலில் உயிர் தப்பிய கடற்படை மருத்துவர் ஹாரி சாண்ட்லர் தனது 103 வயதில் காலமானார்.ஹாரி சாண்ட்லர் அமெரிக... மேலும் பார்க்க

விண்வெளி ஆய்வு மைத்தில் புத்தாண்டு! 16 முறை சூரியோதயத்தைப் பார்க்கும் சுனிதா வில்லியம்ஸ்.!

விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும் போது அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வ... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 போ் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனா். காஸாவில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், அந்தப் பகுதியின் மரு... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: லாகூா் பூஞ்ச் மாளிகையில் பகத் சிங் கண்காட்சி அரங்கு திறப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகா் லாகூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் மாளிகையில் சுதந்திர போரட்ட வீரா் பகத் சிங் நினைவு கண்காட்சியை அந்த மாகாண அரசு பொதுமக்களின் பாா்வைக்கு திறந்துள்ளது. இந... மேலும் பார்க்க

வங்கதேச போராட்டம்: அரசு, மாணவா் அமைப்புகள் இடையே அதிகரிக்கும் கருத்து வேறுபாடு

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடா்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவா் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் ... மேலும் பார்க்க