செய்திகள் :

தாமதமாகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு: என்னென்ன பாதிப்புகள்? - ஆய்வாளர் கருத்தும் ஆளும் தரப்பு பதிலும்

post image

இந்தியாவில் முகலாய மன்னர் அக்பரின் ஆட்சியின் போது, நிர்வாக அறிக்கை, மக்கள் தொகை, தொழில், செல்வம் உள்ளிட்ட விரிவான தரவுகள் திரட்டப்பட்டதாக 'ஐன்-இ-அக்பரி' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு, கவர்னர்-ஜெனரல் லார்ட் மேயோவின் ஆட்சிக் காலத்தில் 1872-ம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் 1881-ல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எல்லா வரலாற்றாசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை கணக்கெடுப்பை கட்டாயம் நடத்த வேண்டும். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த முடியும். இந்தியா கடந்த 2011-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது. அடுத்தக் கணக்கெடுப்பு 2019-ல் தொடங்கியிருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு உள்ளிட்டக் காரணங்களால் அது சாத்தியமில்லாமல் போனது. ஆனால், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி 2 வருடங்களைக் கடந்தும் இன்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தபடாதது குறித்து Madras Institute of Development Studies கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வருகை ஆராய்ச்சியாளருமான டாக்டர் கலையரசனைத் தொடர்புகொண்டு பேசினோம்,

அவர், ``இந்தியாவில் சென்சஸ் - சர்வே என இரண்டு வகையான கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் சர்வே-வின் விவரங்கள் அனைத்தும் சென்செஸின் அடிப்படையில்தான் இருக்கும். எனவே, இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் சமூக, பொருளாதார மாற்றத்தைப் புரிந்துகொள்ள அடிப்படையான விஷயம். அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்துக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும் நெருங்கியத் தொடர்புண்டு.

டாக்டர் கலையரசன்

இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தவறுவதால், சமூகம் சார்ந்து பலப் பிரச்னைகளை எதிர்க்கொள்ள நேரிடும். இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது எனக் கூறினால் அதைப் புரிந்துக்கொள்ளவும், அந்த நகர்புறத்துக்கு தேவையான தண்ணீர், மின்சாரம், நகராட்சி அமைப்புகள் என என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை முடிவு செய்வதற்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் அடிப்படை. இந்தியாவில் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தரவுகளை சேகரிக்கும் The National Sample Survey (NSS) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்வதானால், சரியான திட்டங்களோ, ஆய்வுகளோ வெளிவராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லாததுதான். அதனால், அரசியல், நிர்வாகம் சார்ந்தப் பிரச்னைகளும் இதன் பின்னணியில் தீவிரமாகிறது.

அரசுக்கான நிதி ஒதுக்கீடு முதல் இட ஒதுக்கீடு வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இப்போது அரசு வழங்கும் திட்டங்கள், நிதி அனைத்தும் 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 'இப்போது மக்கள் தொகை எவ்வளவு இருக்கும்' என்ற யூகமான தீர்மானத்தின்படி வகுக்கப்படுகிறது. இது சரியான நடைமுறையோ, அறிவியல்பூர்வமான வழிமுறையோ அல்லை. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகரமயமாக்களின் போக்கு 48 சதவிகிதம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

ஆனால், 2024-ல் இப்போது... சென்னையின் மாற்றங்களை நாம் தெளிவாக பார்க்கிறோம். இன்னும் பழைய கணக்கெடுப்பின்படிதான் திட்டங்கள் வகுக்கப்படும் என்றால், அது பல சிக்கல்களையும், பொருளாதார பிரச்னைகளையும் கொண்டுவரும். அதுபோலதான் கிராமங்களின் வளர்ச்சி, அவர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என சகலமும் பாதிக்கப்படும். மக்கள் தொகையே தெரியாமல் எப்படி அவர்களுக்கான திட்டங்களை உருவாக்க முடியும்... எனவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதமாகுவது நாட்டின் பொருளாதாரத்துக்கே பிரச்னையாக முடியும்." என்றார்.

`தேவைப்படுபவர்கள் பலன்பெறாமலோ, தேவையற்றவர்கள் பலன்பெற்றுக் கொண்டோ இருக்கலாம்'

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதமாவது தொடர்பாக, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நம்மிடம் பேசினார். அப்போது, `ஒருவாரத்துக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், 'ஒன்றிய அரசு, மாநில அரசு எனத் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்துவதைவிட, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 2021-ல் எடுக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, 2025-ம் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அதற்கான செயல்முறையைக் கூட ஒன்றிய அரசு தொடங்காமல் இருக்கிறது. இதிலிருந்து ஒன்றிய அரசு எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்தியாவில் எந்த மாநிலம் எப்படி இருக்கிறது, எந்த சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்குதான் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. இந்த விவரங்களே இல்லாமல் ஒரு அரசு எப்படி இயங்கமுடியும். ஆனால் பா.ஜ.க அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகுதான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரமுடியும் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. எனவே, வேண்டுமென்றே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தள்ளிப்போடுகிறது. இது நாட்டுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. ஒருவேளை ஒன்றிய அரசு 2021-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுத்து முடித்திருந்தால், இட ஒதுக்கீட்டில் மாற்றங்ளையும், உள்ளாட்சிப் பிரதிநிதித்துவத்தில் கூடுதலோ, குறைத்தலோ செய்திருக்கலாம்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை தெரியவரும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில், வறுமைகோட்டுக்குக் கீழே எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்கள் அரசுக்கு தெரியவந்திருக்கும். அதன்மூலம் அவர்களை அதிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். இப்போதைய திட்டங்கள் 2011-ன் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதனால் தேவைப்படுபவர்கள் பலன்பெறாமலோ, அல்லது தேவையற்றவர்கள் பலன்பெற்றுக்கொண்டோ இருக்கலாம். இந்த சிக்கலை தவிர்க்கதான் மக்கள் தொகை அடிப்படை.

ராகுல் காந்தி - மோடி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெளிவாக, உறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கின்றனர். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் என்.டி.ஏ கூட்டணிக்குள்ளேயே இரண்டு கருத்துகள் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு இடத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார். மற்றொரு இடத்தில் அதை மாற்றி பேசுகிறார். அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு என்றாலே அவர்கள் பயப்படுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பா.ஜ.க அரசுக்குதான் பிரச்னைவரும். ஏனென்றால் அவர்கள் கொடுத்த 10 சதவிகித இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என எல்லோருக்கும் தெரியும். எனவே, அது அவர்களின் அரசுக்கு பின்னடைவை தரும். அதனால் அவர்களின் முடிவிலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதால்தான் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமப்படுத்துகிறார்கள். இவர்கள் இதை இன்னும் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை." என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் கௌதம சன்னாவை தொடர்பு கொண்டோம். அவர் ``மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எல்லா நாட்டுக்கும் முக்கியமானது. கால வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என அனைத்துக்கும் இதுதான் மிக முக்கியமானது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லாமல் திட்டமிடப்படும் திட்டங்கள் எல்லாம் கண்துடைப்பு திட்டங்கள்தான் என்பதை தெளிவாக கூறமுடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்குவதாக இருந்தால் 2019-ல் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அதைத் தொடங்கவில்லை. டேட்டா இல்லாமல் ஆட்சி நடத்தி முடித்துவிடலாம் என பா.ஜ.க அரசு நினைக்கிறது. தி.மு.க கடிதம் மட்டும் எழுதினால் போதாது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை தி.மு.க அரசு தொடங்க வேண்டும்.

வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா

இந்தக் கணக்கெடுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுகளுக்கும் மிக அவசியம். தி.மு.க இப்போது அதன் தேவையை உணர்ந்து குரல் கொடுக்கிறதுதான். ஆனால், அது அழுத்தமான குரலாக இல்லை. இன்னும் பலமாக குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். முடியாதபட்சத்தில்  நீதிமன்றத்தையும் நாடலாம். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என திராவிடக் கட்சிகளும், வி.சி.க.வும், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கேட்டுவருகின்றனர். அதையும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே சேர்த்து நடத்திவிட வேண்டும். அதுதான் உகந்ததாகவும் இருக்கும்.

இந்தக் கணக்கெடுப்புடன் மானுடவியல் (Anthropology) கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். இந்தக் கணக்கெடுப்புகள் எடுத்து முடித்துவிட்டால், நாடு பெரும் வளர்ச்சிப் பாதைக்கானத் திட்டங்களை தீட்ட முடியும். இந்தக் கணக்கெடுப்புகள் இல்லாமல் உருவாக்கப்படும் திட்டங்கள் அதானி, அம்பானி போன்றவர்களுக்கு மட்டும் பயனளிக்கும்படியான தொழிற்முறைச் சார்ந்த திட்டங்களாகதான் இருக்கும். அவர்களுக்கான திட்டங்களுக்கு எந்தக் கணக்கெடுப்பும் தேவையில்லை. சமூகம் சார்ந்த முன்னேற்றத்துக்குதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம். பா.ஜ.க-வுக்கு ஆதரவு இல்லாத மாநில முதல்வர்களுடன் தொடர்புகொண்டு, தி.மு.க அரசு இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்." என்றார்.

நாராயணன் திருப்பதி

அதைத் தொடர்ந்து, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாதது குறித்து பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் தொடர்பு கொண்டு பேசினோம். ``பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவந்ததே பா.ஜ.க-தான். எனவே, தி.மு.க-வின் குற்றச்சாட்டு உண்மையில்லை. 2019-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக கொரோனா தொற்றால் அது சாத்தியமில்லாமல் போனது. அதற்குப் பிறகு, தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் எனத் தேர்தல்கள் நடந்ததால் அதைத் திட்டமிட முடியாத சூழல் இருந்தது. கூடிய விரைவில் உறுதியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்றார்.

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிய... மேலும் பார்க்க

திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்!

திமுக கூட்டணி கட்சிகளின் கருத்துகள்!தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. சமீபகாலமாக திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் ... மேலும் பார்க்க

Seeman: `சீமான் Vs வருண்குமார் ஐ.பி.எஸ்' - மோதல் முழு விவரம்

கடந்த ஜூலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் களம் கண்ட நா.த.க வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசா... மேலும் பார்க்க

வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே இது தொடர்பாக சென்னையில் வழக்க... மேலும் பார்க்க

`குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்' - அண்ணா பல்கலை., சம்பவம் குறித்து ஜோதிமணி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரல் கொடுக்க வேண்டியது அனைவரது கடமை. பாலியல் விவகாரம் த... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..' - திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக... மேலும் பார்க்க