செய்திகள் :

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

post image

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிச.23 அன்று சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்கள் 9 பேரில் நேற்று (டிச.28) இரவு ஒருவர் பலியானதுடன், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று (டிச.29) காலை மஞ்சுநாத் வாக்மோர் (வயது-22) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனால், அந்த சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

மேலும், படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்களாக 9 பேரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு சாய் நகரின் சிவன் கோயிலில் தங்கியிருந்தனர்.

பலியான ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துபெற்ற அமைச்சர்கள்!

புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வாழ்த்துபெற்றனர்.2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, மக்கள் அனைவரும் புத்தாண... மேலும் பார்க்க

10வது நாள் - 150 அடி ஆழத்தில் குழந்தை! தோண்டப்பட்ட சுரங்கமும் கைக்கூடாத சோகம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க கடந்த 10 நாள்களாக 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் திசை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த டிச.23 அன... மேலும் பார்க்க

புத்தாண்டு: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

புத்தாண்டை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடுல்) வெளியிட்டுள்ளது.உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக... மேலும் பார்க்க

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த 9 ஐயப்ப பக்தர்களில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் கடந்த டிச.23 அன்று இரவு 1.30 மணியளவி... மேலும் பார்க்க

புத்தாண்டில் காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் நடிகை!

தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதா, அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே ச... மேலும் பார்க்க

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படை... மேலும் பார்க்க