Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
புத்தாண்டில் காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் நடிகை!
தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதா, அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே சங்கீதா. இவர் அழகு சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் மலர் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'வசு' பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
விஜே சங்கீதா கனா காணும் காலங்கள் வெப் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையைத் தொடங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கேம் சேஞ்சர் டிரைலர் தேதி!
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சேஜு. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். வெப் தொடர்கள், குறும்படங்கள் என யூடியூபில் நன்கு அறியப்பட்டவர்.
அரவிந்த் - விஜே சங்கீதா ஜோடிக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்த ராஜா வெற்றி பிரபு - தீபிகா ஜோடி முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அரவிந்த் - விஜே சங்கீதாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.