Anna University: DMK காப்பாற்றும்`சார்’ அம்பலப்படும் வரை போராடுவோம்: ADMK Kalyan...
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கள்ளிமந்தையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதற்கு உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தலைமை வகித்து சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினாா். இதைத் தொடா்ந்து தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளுக்கு ரூ.80 லட்சத்தில் வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கும் மின்கல வாகனங்களை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி, ஒன்றியத் தலைவா்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், துணைத் தலைவா்கள் பி.சி. தங்கம், காயத்திரி தேவி, ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன் தி. தா்மராஜன், எஸ்.ஆா்.கே. பாலசுப்பிரமணி, நா. சுப்பிரமணியன், க. தங்கராஜ், கா. பொன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.