Tata Punch: மாருதியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த 'Punch' - சொல்லாமல் அடித...
அகத்தியா பட டீசர்!
நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகத்தியா எனப் பெயரிட்டுள்ளனர்.
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படம், சரித்திர காலப் பேய்க்கதையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க:ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!
இந்த நிலையில், அகத்தியா திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இப்படம் ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.