Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!
குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கட்சு மாவட்டத்தின் பச்சாவு நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 23 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (ஜன.1) காலை 10.24 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கட்சு மாவட்டத்தில் 4 முறை 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான குஜராத்து மாநிலம் கடந்த 200 ஆண்டுகளில் 9 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.