வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!
Vaiko: 'நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன்!' - வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"2026 – சட்டமன்றத் தேர்தலுக்காக மண்டல பாசறை கூட்டங்கள் விரைவில் நடத்த இருக்கிறோம். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. 200 தொகுதிகளில் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பாஜக- வினால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது. நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன். முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
மற்ற மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்காட்டாக உள்ளார். ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவியை செய்யவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியில் 5 சதவிகித நிதியை மட்டுமே கொடுத்துள்ளார்கள். ஒன்றிய அரசு மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி வருகிறது. ஒன்றிய அரசின் இந்தச் செயல்பாடு எதிர்காலத்தை விபரீதமாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வர பார்க்கிறார்கள். மோடியின் மனதில் அதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் புதைந்து கிடைக்கிறது. ரஷ்யா, அமெரிக்காவைப்போல தான் அதிபராக வேண்டும் என்று மோடி விரும்புகிறார். நாடாளுமன்றம் 3, 4 மாதங்களில் நாடாளுமன்றம் கவிழ்ந்துவிட்டால் மீண்டும் நாடு முழுவதும் ஒரே தேர்தலை நடத்துவார்களா? ஏதாவது ஒரு மாநில அரசு கவிழ்ந்தால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவார்களா? 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்' இந்தியாவில் சாத்தியமற்றது.
நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன். அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.