Kekius Maximus: தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்... எகிறிய கிரிப்டோ கரன்சி காயின் மதிப்பு!
எக்ஸ் தளத்தில் தனது பெயரை 'Kekius Maximus (கேக்கியஸ் மேக்சிமஸ்)' என்று மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
ட்விட்டர் என்றிருந்த சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றியது தொடங்கி, தற்போது அவரது பெயரையே எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ஆனால், இந்தப் பெயர் மாற்றம் ஒட்டுமொத்தமாக இல்லை...அவரது எக்ஸ் பக்கத்தின் ஐடியில் மட்டும் கேக்கியஸ் மேக்சிமஸ் என்ற பெயரை மாற்றியுள்ளார்.
முன்னர் தனது புகைப்படத்தையே டிஸ்பிளே பிக்சராக வைத்திருந்த அவர், இப்போது 'Pepe the Frog' என்கிற மீம் கதாபாத்திரம் வீடியோ கேம் ஜாய்ஸ்டிக்கை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை மாற்றியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் அந்தத் தவளை கிட்டத்தட்ட கிளேடியட்டர் மேக்சிமஸ் மாதிரியே உடை அணிந்திருக்கிறது.
யார் அந்த கேக்கியஸ் மேக்சிமஸ்?
சமீபத்தில் கேக்கியஸ் என்னும் மீம் காயின் கிரிப்டோ கரன்சி உலகில் பிரபலமாக இருந்து வருகிறது.
ஆக, கேக்கியஸ் என்ற மீம் காயின் பெயருடன், கிளேடியட்டர் படத்தின் ஹீரோ கதாபாத்திரம் மேக்சிமஸ் பெயரையும் இணைத்து கேக்கியஸ் மேக்சிமஸ் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார்.
என்ன ஆகியுள்ளது?
கிரிப்டோ கரன்சி இணையதளம் ஒன்றின் தகவல் படி, கடந்த டிசம்பர் 27-ம் தேதி 0.005667 டாலர் மதிப்பில் வணிகம் ஆகி கொண்டிருந்த நிலையில், எலான் மஸ்க்கில் தனது எக்ஸ் பக்கத்தில் பெயரை மாற்றியதில் இருந்து அந்த மீம் காயினின் மதிப்பு கிட்டத்தட்ட 500 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
இதுமட்டுமல்லாமல், கேக்கியஸ் சம்பந்தமான அனைத்து கிரிப்டோ கரன்சி மீம் காயின்களின் மதிப்புகளுமே எலான் மஸ்க் தனது பெயரை எக்ஸ் பக்கத்தில் மாற்றியதில் இருந்து 200 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
ஆனால், எலான் மஸ்க் இன்னும் எக்ஸ் பக்கத்தில் தனது பெயர் மற்றும் டிஸ்பிளே பிக்சர் மாற்றத்திற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.