Bigg Boss 8 Grand Finale: `கேப்டன் ஆஃப் தி ஷிப்' -தீபக், `டாஸ்க் பீஸ்ட்' ரயான் -...
நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் என்பதை 2026 இல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்" 'அமைதிப்படை' படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் 'அமாவாசை' கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.
பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது என நேற்று பேசியிருக்கிறார்.
சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
அமாவாசை-பழனிசாமி
ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதல்வராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும் என 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம்.
இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என 2024 ஜனவரி 25 இல் எக்ஸ் பக்க பதிவு.
"திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன என 2024 செப்டம்பர் 20 ஆம் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருந்தார்.
நூறு பெளர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதல்வர்
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23 ஆம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் என்பதை 2026 இல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என கூறியுள்ளார்.