செய்திகள் :

Simply சட்டம்: `உயில் தொடர்பாக வரும் பிரச்னைகள் என்னென்ன?’ - சொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை!

post image
சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவனத்தின் Legal Head தாமினி.
ஜோல்விட் (Zolvit) நிறுவனத்தின் Legal Head தாமினி.

``ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் பட்சத்தில், இரண்டாவது மனைவிக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் சொத்தில் உரிமை உண்டா?"

``ஒருவருக்கு இரண்டாவது மனைவியுடன் எப்போது திருமணம் ஆனது என்பதனை நாம் முக்கியமாக பார்க்க வேண்டும். முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுது அவருடன் உண்டான திருமண பந்தம் நீதிமன்றத்தால் விவாகரத்து கொடுக்கும் வரையில் அவரால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி அவர் திருமணம் செய்து கொண்டால், அவருடைய இரண்டாவது மனைவி சட்டபூர்வமான வாரிசாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார். முதல் திருமணம் முறையாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பொழுது இரண்டாவது மனைவிக்கு சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. ஆனால் அந்த இரண்டாவது மனைவிக்கு பிறக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் சொத்தில் உரிமை உண்டு. ஏனென்றால் திருமணம் தான் முறையற்றது, ஆனால் அந்த குழந்தைகள் சட்டபூர்வமாக உரிமை அற்றவர்கள் என சொல்ல முடியாது. இவர்களுடைய பெயரும் வாரிசு சான்றிதழில் வரும். முதல் மனைவி மற்றும் முதல் மனைவியினுடைய குழந்தைகள், இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தைகள் பெயர்களும் வாரிசு சான்றிதழில் வரும்."

``உயில் யாருக்கு எழுதி வைக்கிறார்களோ அவர்களுக்கு உரிமை சென்று சேர்கிறது.  உயில் சம்பந்தப்பட்டு வருகினற பிரச்னைகள் என்னென்ன?"

``ஒரு பிராப்பர்ட்டி மேல் உயில் இருக்கிறது என்றால், உயில் இருக்கின்றது என்று தெரியாமல் இருக்க நிறைய செய்வார்கள். அண்ணன் தம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவருக்கு மட்டும் அனைத்து சொத்துகளும் சென்று சேர வேண்டும் என்று தந்தை உயில் எழுதி இருந்தால், மற்ற மூன்று பேர் அந்த உயிலை எரித்துவிட்டு சொத்தில் பாகம் கேட்ட உண்மை கதை எல்லாம் நிகழ்த்து இருக்கிறது. அது போன்ற பிரச்சனைகளும் வரலாம். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், உயில் என்கிற ஆவணத்தை நாம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதனால் இது வில்லங்க சான்றிதழில் தெரியாது. உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயம் கிடையாது. உயில் என்பது இரண்டு பேர் முன்னிலையில் ஒருவர் எழுதும் பொழுது அது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. பதிவு செய்யப்படாத உயிலை நாம் இருக்கிறதா இல்லையா என்று எங்கேயும் சென்று சரி பார்க்க முடியாது. நாம் முறையாக ஒரு பிராப்பர்ட்டி வாங்கும் பொழுது, வில்லங்க சான்றிதழ், டைட்டில் டீட்ஸ், அப்ரூவல், பட்டா ஆகியவற்றை நாம் பார்த்து இருக்கிறோம் என்னும் பட்சத்தில் நம்மை யாரோ வேண்டும் என்றே ஏமாற்றி இருந்தால் நீதிமன்றத்தை அணுகி நம் பிரச்சனையை சரி செய்துகொள்ள முடியும்."

``பவர் ஆஃப் அட்டார்னியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? பவர் ஆஃப் அட்டார்னியை நம்பி சொத்து வாங்கலாமா?"

``பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney) என்பது செல்லுபடியாகும் டாக்குமெண்ட் தான். அதனை அடிப்படையாக வைத்து நாம் ஒரு பிராபர்ட்டியை வாங்கலாம். இந்த பவரை வைத்து நாம் பார்க்கும் பொழுது, ஒரு பிராபர்டியை விற்பதற்கான அதிகாரத்தை ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி என்கிற டாக்குமெண்ட் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். அதாவது அது பொது அதிகார பத்திரமாக இருக்க கூடாது. குறிப்பிட்டு இந்த பிராபர்ட்டிக்கு மட்டும் என்று அட்டவணையில் அந்த பிராபர்ட்டியின் விவரங்கள் கொடுத்து இருக்க வேண்டும். இதுதான் நாம் முதலில் பார்க்க வேண்டிய விஷயம். அப்படி குறிப்பாக அந்த பிராப்பர்ட்டியை மட்டும் கொடுத்து இருந்தால் மட்டுமே, வில்லங்க சான்றிதழில் அந்த விவரங்கள் கிடைக்கும். இன்றைய கால கட்டத்தில் ஒரு வீடியோ கால் மூலமாக அந்த உரிமையாளர் இவருக்கு தான் என்னுடைய சொத்துக்களை விற்க பவர் கொடுத்து உள்ளேன் என்று தெரிவிக்க வேண்டும். உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கிறார், உண்மையாகவே உரிமையாளர் தான் பவர் கொடுத்து இருக்கிறாரா, அந்த பவர் இன்று வரைக்கும் செல்லுபடியாக கூடியதாக உள்ளதா என்பதனை நாம் பார்க்க வேண்டும். இதனை நாம் வீடியோ கால் மூலமாகவும் சரி பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால், ரிஜிஸ்ட்ரேஷன் நடக்கும்பொழுது, உரிமையாளர்களுடைய லைப் சர்டிபிகேட், மெடிகல் சர்டிபிகேட் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இந்த பவர் கொடுத்த உரிமையாளர் சுயநினைவோடு இருக்கிறார் எனவும், அவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார் என்பதனை சரி பார்க்க வேண்டும். பவர் ஆஃப் அட்டார்னி என்பது பவர் கொடுத்தவர் அல்லது வாங்கியவர் என இருவரும் உயிரோடு இருந்தால் மட்டுமே அது செல்லுபடியாகும். இருவரில் ஒருவர் உயிரிழந்து விட்டாலும் கூட பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது. எனவே இதனை சரிபார்துவிட்டு ஒரு பிராபர்ட்டி வாங்குவது என்பது நல்லது."

சொத்து சார்ந்த சட்ட பிரச்னை இருக்கிறதா? Legal Opinion தேவையா? இந்த Link-ஐ க்ளிக் செய்யுங்கள்

https://www.vikatan.com/vikatan-zolvit?utm_source=vikatan

இது தொடர்பான முழுமையான விளக்கம் கீளே உள்ள வீடியோவில்..!

சொத்து சார்ந்த சட்ட பிரச்னை இருக்கிறதா? Legal Opinion தேவையா? இந்த Link-ஐ க்ளிக் செய்யுங்கள்

https://www.vikatan.com/vikatan-zolvit?utm_source=vikatan

"பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்" - டெல்லி நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சு, போக்சோ (POCSO) குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

பரோலில் வந்து நண்பரைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; யார் இந்த காட்டேரி சுடலைமுத்து?

தூத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற காட்டேரி சுடலை முத்து. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது மாவட்ட முதன்மை நீத... மேலும் பார்க்க

Simply சட்டம்: `பெண்களுக்கு சொத்துக்களில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது? சட்டம் சொல்வது என்ன?’

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவ... மேலும் பார்க்க

மனைவிக்கு ஜீவனாம்சம்; மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டுவந்த கணவர்... நீதிமன்றத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் சமீபகாலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது.கோவை நீ... மேலும் பார்க்க

`19 வயது பெண், 20 வயது ஆணுடன் லிவ்இன் உறவில் வாழலாம்’ - வழக்கும் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவும்

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 19 வயது பெண் 20 வயது வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அப்பெண் தனது வீட்டைவிட்டு வெளியேறி அந்த வாலிபர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அவர்கள் த... மேலும் பார்க்க

`பொய் வழக்கு போடும் போலீஸார் மீது வழக்கு தொடர, முன் அனுமதி தேவையில்லை!' - உச்ச நீதிமன்றம்

பொய் வழக்குகள் பதிவு செய்ததாகவோ அல்லது பொய்யான ஆதாரங்களைத் தயாரித்ததாகவோ குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க, முன் அனுமதி ஏதும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்... மேலும் பார்க்க