`பொய் வழக்கு போடும் போலீஸார் மீது வழக்கு தொடர, முன் அனுமதி தேவையில்லை!' - உச்ச நீதிமன்றம்
பொய் வழக்குகள் பதிவு செய்ததாகவோ அல்லது பொய்யான ஆதாரங்களைத் தயாரித்ததாகவோ குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க, முன் அனுமதி ஏதும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197வது பிரிவின் கீழ் அனுமதியின்றி இது போன்ற அதிகாரிகள் மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ``அரசு ஊழியர் ஒருவர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்வது சட்டம் பாதுகாப்பு குடையின் கீழ் வராது.
ஒரு போலீஸ் அதிகாரி பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்பட்டால், CrPC பிரிவு 197 இன் கீழ் வழக்குத் தொடர அனுமதி தேவை என்று அவரால் கோர முடியாது. ஏனெனில் போலி வழக்குப் பதிவு செய்து ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பது ஒரு பொது அதிகாரியின் உத்தியோக பூர்வ கடமையாக இருக்க முடியாது. ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கப் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிரான கிரிமினல் வழக்கை ரத்து செய்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஒரு போலீஸ் அதிகாரி, தனது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது முறையல்ல. அதைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது... அல்லது வெற்றுத்தாளில் கையொப்பம் பெற முயற்சி செய்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, குற்றம்சாட்டப்பட்ட நபரை சட்டவிரோதமாகக் காவலில் வைப்பது, தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை உருவாக்க குற்றவியல் சதியில் ஈடுபடுவது, தனிநபர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் தேடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால்... CrPC பிரிவு 197-ன் கீழ் அத்தகைய போலீஸ் அதிகாரிகளால் பாதுகாப்பு குடையின் கீழ் பயன்பெற முடியாது" என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.Modi vs Congress 'நேரு, இந்திரா காந்தியை சாடிய மோடி; காட்டமான காங்கிரஸ்' - அதகளமான நாடாளுமன்றம்.