செய்திகள் :

பலவீனமான உலகளாவிய போக்கால் சரிந்த பங்குச் சந்தைகள்!

post image

மும்பை: இந்த வார இறுதியில் அமெரிக்க பெடரல் வட்டி விகித அறிவிப்புக்கு முடிவுக்கு முன்னதாக உலகளவில் பங்குச் சந்தைகளில் பலவீனமான போக்கு நிலவியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 581.84 புள்ளிகள் சரிந்து 81,551.28 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து 81,748.57 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 100.05 புள்ளிகள் சரிந்து 24,668.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் ப்ளூ-சிப் பேக்கில் டைட்டன், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், என்டிபிசி, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது. மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

இதையும் படிக்க: அக்டோபரில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

ஐடி, உலோகம், எண்ணெய் & எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி துறை பங்குகள் இன்று முதலீட்டாளர்கள் விற்பனை செய்த நிலையில், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி, ஊடகம் ஆகிய துறைகளின் பங்குகளை இன்று முதலீட்டாளர்கள் வாங்கியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யின் சரிவைக் சற்றே இது கட்டுப்படுத்தியது.

துறைகளில் ரியாலிட்டி குறியீடு 3 சதவிகிதமும், மீடியா குறியீடு 1.5 சதவிகிதமும், பொதுத்துறை வங்கி குறியீடு 0.5 சதவிகிதமும், ஐடி, மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு 0.5 சதவிகிதம் உயர்ந்தது.

ஓபராய் ரியால்டி, கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், 360 ஒன் வாம், அஃபிள் இந்தியா, லாயிட்ஸ் மெட்டல்ஸ், பேடிஎம், இந்தியன் ஹோட்டல்ஸ், இன்ஃபோ எட்ஜ், எச்பிஎல் பவர், கேபிஆர் மில்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ராம்கோ சிமென்ட்ஸ், எல்டிஐ-மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், பிஎல்எஸ் இன்டர்நேஷன், கிரிசில், கோஃபோர்ஜ், ஸ்வான் எனர்ஜி, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

இதையும் படிக்க: யுபிஐ மூலம் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்து சாதனை!

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தது. அதே வேளையில் வால் ஸ்ட்ரீட் கடந்த (வெள்ளிக்கிழமை) சரிந்து முடிவடைந்தது.

இதற்கிடையில், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் நவம்பரில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.89 சதவிகிதமாக குறைந்துள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,335.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.75 சதவிகிதம் குறைந்து 73.91 அமெரிக்க டாலராக உள்ளது.

ராஜஸ்தானில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஒரியானா பவர்!

புதுதில்லி: ராஜஸ்தானில் பசுமை எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீடு செய்வதாக ஒரியானா பவர் இன்று உறுதியளித்துள்ளது.ஜெய்ப்பூரில் சமீபத்தில் முடிவடைந்த ரைசிங் ராஜஸ்தான் குளோபல் உச்சி மாநா... மேலும் பார்க்க

2024ல் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை ரூ.881 கோடி!

புதுதில்லி: ஆயுள் காப்பீட்டுக் கழகம் இடம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.880.93 கோடி கோரப்படாத முதிர்வுத் தொகை உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.2024 நிதியாண்டில் சுமார் 3,72,282 பாலிசிதாரர்கள்... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

பங்குச்சந்தை இன்று சற்றே (டிச. 16) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த வாரத்தின் தொடக்கத்தை விட இந்த வாரம் பங்குச்சந்தை உ... மேலும் பார்க்க

புணே: நவம்பர் மாதத்தில் சொத்துக்களின் பதிவு 11% வீழ்ச்சி!

புதுதில்லி: புணேவில் சொத்துகளின் பதிவு விகிதம் கடந்த நவம்பரில், 11% குறைந்து, 13 ஆயிரத்து 371 ஆக உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா இன்று ... மேலும் பார்க்க

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திய ஸ்பைஸ் ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.1,60.07 கோடியை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.பல சாவல்கள எதிர்கொண... மேலும் பார்க்க

சரிந்து மீண்ட பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில் பின்னர் மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை81,212.45 என்ற புள்ளிக... மேலும் பார்க்க