பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை: ஆலன் பார்டர் புகழாரம்!
முதல்வரின் செயலர்களுக்கான துறைகள் மாற்றம்!
சென்னை: தமிழக முதல்வரின் செயலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து இன்று(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல்வரின் தனிச் செயலர் உமாநாத்துக்கு உள்துறை, நிதித்துறை, மின்சாரம், நெடுஞ்சாலை, பொதுப்பணி துறை உள்ளிட்ட 17 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் இணைச் செயலர் லட்சுமிபதிக்கு சுற்றுசூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஐவருக்கு கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு