செய்திகள் :

Bigg Boss 8 : `பிக் பாஸ் வீட்டில் நான் நானாகதான் இருந்தேன்' - எவிக்‌ஷனுக்குப் பிறகு தர்ஷிகா

post image
பிக் பாஸ் சீசன் 8, 70 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களாக எதிர்பாரத டிவிஸ்ட்டாக டபுள் எவிக்‌ஷனில் இரு இரு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். போன வார டபுள் எவிக்‌ஷனில் ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேறி இருந்தனர். இந்த வார டபுள் எவிக்‌ஷனில் சத்யாவும் தர்ஷிகாவும் வெளியேறினர்.

பிக் பாஸ் வீட்டில் இருமுறை கேப்டனாக இருந்தவர் தர்ஷிகா. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார்.

பிக் பாஸ் தொடர்பாக பதிவிட்டுள்ள தர்ஷிகா, ``நீங்கள் என்மேல் காட்டிய அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு புள்ளியில் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் மற்றொரு விஷயத்தையும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் நான் நானாகதான் இருந்தேன். நான் எந்தவொரு நேரத்திலும் எனக்கு பொய்யாக இல்லை. என்னுடைய உணர்வுகளும் , கேம் ப்ளேவும் நேர்மையானது. `Call a spade is a spade' என்பதுதான் என்னுடைய கேம். " என பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Bigg Boss Exclusive: ``செளந்தர்யா மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு" - ஆனந்தி ஓப்பன் டாக்

பிக் பாஸ் சீசன் 8, 70 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.கடைசி கட்டத்தை எட்டிவிட்டதால் விஜய் சேதுபதியும் நேற்று போட்டியாளர்களிடம் `ஒன் - ஒன்' நேர்காணல் வைத்துப் பேசியிருந்தார். க... மேலும் பார்க்க

மனைவியுடனான பிரிவு; சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷுடனும் சண்டை; என்னாச்சு பிக்பாஸ் மணிகண்டனுக்கு?

பிக்பாஸ் சீசன் 6 ன் போட்டியாளரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டனும் அவரின் மனைவியும் நடிகையுமான சோபியாவும் கருத்து வேறுபாடுடன் இருக்கிறார்கள்.இருவருக்குமிடையிலான பிரச்னையைத்தீர்த்து வைக்க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 70: பின்னடைவைத் தந்ததா காதல்; கேப்டனாகத் தடுமாறும் ரஞ்சித்; தப்பித்த இருவர்

டாப் 5-ல் வந்திருக்கக்கூடிய அளவிற்கு திறமையான ஆட்டக்காரராக தன் ஸ்கோரைத் துவங்கிய தர்ஷிகா இன்று வெளியேறியிருக்கிறார். அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது காதலா? ‘ஒண்ணும் புரியலே. எங்கயோ மிஸ் பண்றேன்’ என்க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 69: மீண்டும் மீண்டும் கண்கலங்கிய பவித்ரா, உரையாடலில் மல்லுக்கட்டிய விசேவும் அருணும்!

லேபர் என்கிற Term சரியா தவறா என்று அருணிற்கும் விஜய் சேதுபதிக்கும் நடந்த விவாதம் சற்று நீளமாகவும் இழுவையாகவும் சென்றாலும் அது முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தில் தான் கன்வின்ஸ் ஆகாத வரைக்க... மேலும் பார்க்க