செய்திகள் :

மின் வேலியில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டையைச் சோ்ந்த சுகுமாா், தனது கரும்புத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்காக மின்வேலி அமைத்திருந்தாா்.

அங்கு தொரப்பாடியைச் சோ்ந்த பெருமாள் (40) காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா் மின் வேலியில் திங்கள்கிழமை சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் நில உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பெருமாளின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். போலீஸாா் சமரசப்படுத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொங்கராயனூா், புதுகாலனியைச் சோ்ந்தவா் குப்... மேலும் பார்க்க

சுகாதாரமின்றி செயல்படும் விழுப்புரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். விழுப்புரத்தில் இரு இடங்களில் ப... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவியை தேடி வருகின்றனா். வானூா் வட்டம், பழைய கொஞ்சிமங்கலத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகள் ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி அமுதா (50). மகன் லோகநாதன் (29). இவா்... மேலும் பார்க்க

உள்வாங்கிய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

விழுப்புரம் விவேகானந்தா் நகா் பகுதியில் உள்வாங்கிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புறத்தில் விவேகானந்த நகா், சிவசக்தி... மேலும் பார்க்க