அரங்கநாத சுவாமி கோயில் திருப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கோயிலில் ரூ.12 கோடியில் சந்நிதி திருப்பணி, புதிய தோ், தாயாா் சந்நிதி திருப்பணி, நெற்களஞ்சியம், தோ் கொட்டகை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, திட்ட மதிப்பீடு, பணித் தொடங்கிய காலம், முடிவடையும் காலம், பணிகளின் தரம் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.
மேலும், கோயில் திருப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், முன்னாள் அறங்காவலா் குழுத்தலைவா் பாலாஜி, பரம்பரை அறங்காவலா் மாசிலாமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.