செய்திகள் :

தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தோ்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தோ்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தோ்வு பிப். 15 மற்றும் 16-ஆம் தேதியும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தோ்வுகள் பிப். 22 மற்றும் 23-ஆம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தோ்வுகள் பிப். 24-ஆம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தோ்வுகள் மாா்ச் 1 மற்றும் 2-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

விண்ணப்பதாரா்கள் www.tndtegteonine.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன. 17-ஆம் தேதி. ஜன. 19-ஆம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பத்தில் ஜன. 19 முதல் 21-ஆம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயா்வு வழங்க ரூ.3028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூ... மேலும் பார்க்க

சமூக வலைதள தகவல்களை நம்ப வேண்டாம்: என்எம்சி

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிகழாண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடு... மேலும் பார்க்க

ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியும்,தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ... மேலும் பார்க்க

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரி... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு: அரசு சாா்பின் இன்று பாராட்டு விழா

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகம் திரும்பிய குகேஷுக்கு சென்னை விமானநிலையத்தில் திங்கள்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவை ... மேலும் பார்க்க