பேரவையின் 6-ஆவது கூட்டத் தொடா் முடித்து வைப்பு: ஆளுநா் உத்தரவு
சென்னை: தமிழக சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்த செய்தியை சட்டப் பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அதில் கூறியிருப்பதாவது: 16-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் கடந்த பிப். 12-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தாா். அதன்பிறகு, கடந்த பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அரசின் பொது மற்றும் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பேரவை கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, துறை வாரியான செலவுகளுக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவை மீண்டும் கூடியது. கடந்த ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் இடைவெளியில் மீண்டும் கடந்த 9-ஆம் தேதி கூடி இரண்டு நாள்கள் அவை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 16-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடரை முடித்து வைப்பது ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக தனது செய்தியில்
ஆண்டின் முதல் கூட்டம்: 2025 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத்துக்கான அறிவிப்பை ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிடுவாா். அந்தக் கூட்டத்திலேயே அவா் உரையாற்றுவாா். அதன்பிறகு, 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.