செய்திகள் :

நல்ல நாள் இன்று!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

17-12-2024 செவ்வாய்க்கிழமை

மேஷம்:

இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:

இன்று வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களால் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:

இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் உண்டாகலாம். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். உடல் ஆரோக்யம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:

இன்று மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் ஏற்படலாம். இடமாற்றம் உண்டாகலாம். கன்னிபெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:

இன்று பெரியோர்களின் அனுசரனை கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:

இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:

இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வது நல்லது. போராட்டங்களை பற்றி கவலைப்படாமல் வெற்றியையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள். எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணதேவை உண்டாகலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:

இன்று முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு உண்டாகலாம். எனவே கவனமாக பேசுவது நல்லது. முயற்சிகளில் தடை உண்டாகலாம். பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும். வீண் பிரச்சனையால் இருந்த மனக்குழப்பம் நீங்கி மனதில் உற்சாகம் ஏற்படும். பயணங்களில் இருந்த தடங்கல்கள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:

இன்று வழக்கு விவகாரங்களை தள்ளிபோடுவது நல்லது. சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும். காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மேம்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:

இன்று வீண் அலைச்சல் எப்போதும் மனசங்கடமும் இருக்கும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் பகை வராமலும், உடல் ஆராக்யம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:

இன்று தாய்தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. நலல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நியூஸிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி... மேலும் பார்க்க

இந்திய பேட்டா்கள் தடுமாற்றம்; மழை பாதித்த 3-ஆம் நாள் ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமாக விளையாடி வருகிறது.இந்தியாவின் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போக, கே.எல்.... மேலும் பார்க்க

19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு ஏலம்!

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசனுக்காக பெங்களூரில் நடைபெற்ற மினி ஏலத்தில் 19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு 5 அணிகளால் வாங்கப்பட்டனா்.அதிகபட்சமாக இந்தியாவின் சிம்ரன் ஷேக் ரூ.1.90... மேலும் பார்க்க

விடாமுயற்சி டிரைலர் எப்போது?

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்பட டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர... மேலும் பார்க்க

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தரிசன சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர்... மேலும் பார்க்க