செய்திகள் :

Doctor Vikatan: கேழ்வரகு உணவுகள் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிரிக்குமா?

post image

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு உணவு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கேழ்வரகு எடுத்துக்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சொல்கிறார் ஒரு மருத்துவர். அது உண்மையா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

vikram

மாவுச்சத்துள்ள மற்ற உணவுகளைவிடவும் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உணவானது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. அது கேழ்வரகு உணவுகளுக்கும் பொருந்தும். சிறுதானிய உணவுகளின் மிகச் சிறந்த பலன் இது.

கேழ்வரகு நல்லது என்றதும் பலரும் அதை கூழ் அல்லது கஞ்சி வடிவில்தான் அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். அரிசி, கோதுமை உணவுகளைவிடவும், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றவை. காரணம் அவற்றின் 'லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்'. ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. சிறுதானிய உணவுகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் தன்மை உடையவை.

சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.

கேழ்வரகோ, பிற சிறு தானியமோ, எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதும், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம். சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளை கூழ், களி, கஞ்சி வடிவங்களில் எடுத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும். அதனால் அவற்றை இட்லி, தோசை, அடை போன்ற வடிவங்களில் செய்து, அளவோடு சாப்பிடலாம். கேழ்வரகு உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் எனத் தெரிந்து எடுத்துக்கொள்ளும்போது ரத்தச் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கேழ்வரகின் நல்ல தன்மையோடு சேர்த்து அதிலுள்ள கால்சியம் சத்தும் உடலுக்குச் சேரும் என்பதே உண்மை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Healthy Food: இதயம் தொடங்கி வயிறு வரைக்கும் நல்லதே செய்யும் பாசிப்பருப்பு!

பாசிப்பருப்பு சீக்கிரம் வேகும், ருசியில் நாக்கை அசத்தும் என்பது சமைத்தவர்களுக்கும், ருசித்தவர்களுக்கும் தெரியும். பாசிப்பருப்பில் இருக்கிற நன்மைகள் பற்றி டயட்டீஷியன் அம்பிகா சேகரிடம் கேட்டுத் தெரிந்து... மேலும் பார்க்க

Aadhav Arjuna: விஜய்யின் தவெக -வில் இணைகிறாரா? - ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்

கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்திருந்தா... மேலும் பார்க்க

TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வாகிகள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மூட்டுவலி வருமா?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்புக்காகஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தார். அதன் காரணமாக அவருக்கு மூட்டுவலிவந்துவிட்டது. மருத்துவர் ஸ்கிப்பிங்கைதவிர்க்கச் சொல்லிவிட்டதாகச்சொல்கிறார். ஸ்கிப்பிங்... மேலும் பார்க்க

``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் சொன்னது என்ன?!

கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இத... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா?

Doctor Vikatan:தூக்க மாத்திரைகளுக்குப் பதிலாக தற்போது சில மருத்துவர்கள் ஆன்டி-டிப்ரெசன்ட் (anti-depressant) மாத்திரைகள் கொடுக்கிறார்கள்... அவை நல்லையா? தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா?பதில் சொல்கிறார், ... மேலும் பார்க்க