Modi vs Congress 'நேரு, இந்திரா காந்தியை சாடிய மோடி; காட்டமான காங்கிரஸ்' - அதகளம...
Aadhav Arjuna: விஜய்யின் தவெக -வில் இணைகிறாரா? - ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்
கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.
இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனாவிடம் கட்சியில் இருந்து விலகியது குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, " தலைவர் திருமாவளவனின் வார்த்தைக்கு நான் என்றுமே கட்டுப்படுவேன். அவருடைய அன்பையும், வாழ்த்துகளையும், அட்வைஸையும் எடுத்துக்கொண்டு நான் பயணிப்பேன்.
எதிர்காலத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கின்ற விஷயத்தை குறிப்பாக கொள்கை தலைவர்கள் எல்லோருமே ஒரு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அந்தக் கொள்கையை கண்டிபாக என்னுடைய பிரசாரம் மூலம் நிறைவேற்றுவேன். திருமா அண்ணனின் விமர்சனத்தை அட்வைஸாகதான் நான் பார்க்கிறேன்.
அவரிடம் இருந்து கள அரசியலை நான் நிறையக் கற்றிருக்கிறேன். எப்போதுமே அவர் என்னுடைய ஆசான். கொள்கை சார்ந்த விஷயத்தில் எப்போதுமே என்னுடைய பயணம் அவருடன் இருக்கும்" என்றார். பிறகு தவெகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய் வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.