சிம்பிளாக நடந்த சிவாஜி கணேசன் பேரன் நிச்சயதார்த்தம்; மணப்பெண் இவர் தான்
Career: '12-ம் வகுப்பு படித்தாலே எந்த நிறுவனத்திலும் முக்கிய பதவி!' - எப்படி... என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலும், நிறுவனங்களில் தலைவருக்கு அடுத்தப்படியான முக்கிய பதவிகளில் 'கம்பெனி செக்ரட்டரி' பதவியும் இருக்கும். அந்தப் பதவியை ஈசியாக எட்டிவிட முடியாது. அதற்கும் தேர்வு உண்டு. ஆனால், இதில் பிளஸ் என்னவென்றால் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த பதவியை எட்டலாம்.
பர்சனல் செக்ரட்டரி வேறு...இது வேறு...
ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களிலும் செக்ரட்டரி என்ற முக்கியப் பதவி இருக்கும். பலரும் கம்பெனி செக்ரட்டரி என்றால் பர்சனல் செக்ரட்டரி என்று நினைத்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறு. நிறுவனத்தின் சட்டம் மற்றும் நிறுவனத்தை ஒழுங்குப்படுத்தும் நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு, நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், அந்த முடிவுகளை நிறுவன இயக்குனர்கள் நடைமுறைப்படுத்துவதற்கும் பக்க பலமாக இருப்பவர்கள் தான் கம்பனி செக்ரட்டரி. இந்தப் பதவியை தமிழில் 'நிறுவன செயலர்' என்று அழைப்பார்கள். சுருக்கமாக, ஒரு நிறுவனத்தின் சிறப்பான அடித்தளம் மற்றும் திறமை மிகு நிர்வாகம் அமைய அடிக்கல் நாட்டுவதே 'கம்பெனி செக்ரட்டரி' தான்.
சி.எஸ் படிப்பு
இந்தப் பதவிக்கு சி.எஸ் என்கிற கம்பெனி செக்ரட்டரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் படிப்பு மற்றும் தேர்வை மேலே கூறி உள்ளதுப்போல, 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரி இன் இந்தியா' நடத்துகிறது.
இந்தப் படிப்பு நான்கு நிலைகளை கொண்டது. அவை...
பவுண்டேஷன் புரோகிராம் (Foundation Programme)
எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (Executive Programme)
ஆர்டிகல்ஷிப் (Articleship)
புரொபசனல் புரோகிராம் (Professional Programme)
இரண்டு வழிகள்...
ஒன்று, 12-ம் வகுப்பில் எந்த பிரிவு படித்திருந்தாலும் இந்தத் தேர்வு எழுதப் படிக்கலாம். நுண்கலை படிப்பை தவிர, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வு எழுத படிக்கலாம்.
பவுண்டேஷன் புரோகிராம் தேர்வை 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக இந்தப் பிரிவை தேர்ந்தெடுப்பவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை.
இதன் பின்னர் மூன்று தேர்வுகளையும் முடித்து CLDP (Corporate Leadership Development Program) பயிற்சியை முடித்தால், நீங்களும் ஆகலாம், 'கம்பெனி செக்ரட்டரி'.