சச்சினின் பேட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள்: விராட் கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை!
Zakir Hussain: `அவருக்காக தபேலாக்களை உருவாக்கினேன்; அவர் என் வாழ்வை உருவாக்கினார்' - ஹரிதாஸ் வட்கர்
இந்தியாவின் தலைசிறந்த தபேலா இசைக்கலைஞர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் (73), இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒருவாரமாக சான் பிராசிஸ்கோவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலக அளவில் மிகப் பிரபலமான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண், 4 கிராமி விருதுகள் (2024-ல் மட்டும் 3) உள்ளிட்ட சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றிருக்கிறார்.
இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரின் மரணத்துக்குப் பிரபல இசைக்கலைஞர்கள் பலரும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், ஜாகிர் உசேனுக்குத் தபேலா செய்துகொடுத்தவரான ஹரிதாஸ் வட்கர், ``நான் முதன்முதலில் ஜாகிர் உசேனின் தந்தை அல்லா ரக்காவுக்கு தபேலாக்களைச் செய்து கொடுத்தேன். அதையடுத்து, 1988 முதல் ஜாகிர் உசேனுக்குத் தபேலாக்கள் செய்யத் தொடங்கினேன்.
குரு பூர்ணிமா தினத்தில் ஒரு மண்டபத்தில் அவரைச் சந்தித்தேன். அடுத்த நாள், நேபியன் கடல் சாலையில், சிம்லா ஹவுஸ் கூட்டுறவு சங்கத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். இரண்டு மணி நேரம் உரையாடினோம். எப்போது எந்த மாதிரியான தபேலா வேண்டும் என்பதில் அவர் உன்னிப்பாக இருந்தார்.
இசைக்கருவி ட்யூனிங்கில் (Tuning) அதிக கவனமாக இருந்தார். புதிய தபேலாக்களைச் செய்வது மட்டுமல்லாது, அவரின் பழைய தபேலாக்களைப் பராமரிப்பவனாகவும் இருந்தேன். அவருக்காக நான் தபேலாக்களை உருவாக்கினேன். அவர் என் வாழ்வை உருவாக்கினார்." என்று ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...